வெளிநாட்டு பிரபலங்களின் கருத்திற்கு சச்சின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் ரத்து செய்ய கோரி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளில் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு இதுவரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதற்கு சச்சின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய இறையாண்மை தொடர்பாக சமரசம் செய்து கொள்ள முடியாது. வெளிநாட்டு சக்திகள் பார்வையாளராக இருக்கலாம். ஆனால் நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க இயலாது என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.