பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரை சிறுவன் ஒருவன் குற்றம் சாட்டும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பிரிட்டனில் இணையதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதாவது பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரான கிரிஸ் விட்டி என்பவர் விக்டோரியா ஸ்டேஷனிற்கு அருகில் இருக்கும் Strutton Ground Marketல் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்று நிற்கச்சொல்லி ஒரு வீடியோவை பதிவுசெய்கிறார்.அதில் அச்சிறுவன் கிரிஸ் விட்டியை பார்த்து “இவர் பொய்யானவர், இங்கே நிற்கும் நபர் பொய்யானவர்” என்று கூறிக்கொண்டே இருக்கிறார்.
இதனால் வேறுவழியின்றி எதுவும் பேசாமல் அங்கேயே கிரிஸ் விட்டி அமைதியாக நிற்கிறார். இதனைத்தொடர்ந்து பிரிட்டன் சுகாதார செயலாளர், இந்த வீடியோவை பார்த்துவிட்டு புகழ்பெற்ற மிகச் சிறந்த விஞ்ஞானியான கிரிஷ் விட்டி எல்லோராலும் மதிக்கப்பட வேண்டியவர் என்றும் இது அவருக்கு பரிதாபமான நிலையாக உள்ளது என்று கூறினார். மேலும் இதனை செய்த அந்த சிறுவனின் செயல்பாடு மிகவும் கண்டிக்கப்படவேண்டியது என்றும் கூறியுள்ளார்.