சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரனூர் பகுதியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முகமது மீரானின் உடலானது பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதால் அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.