சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டி தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் V.R. வெண்மதி சார்பில், சின்னம்மாவை வரவேற்று வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், காவல் தெய்வமே – அனைவருக்கும் முகவரி தந்த சின்னம்மாவே வருக வருக வருக என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சை வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியம், முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.நாராயணசாமி, தியாகத்தலைவி சின்னம்மாவை வரவேற்று பந்தநல்லூர், திருப்பனந்தாள், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது, அ.தி.மு.க.வினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூரில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு.கவியரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரு.ஆனந்தன், திரு.கலைச்செல்வன், திரு.சூர்யா ஆகியோர் இணைந்து, சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுல்லைவாசல் ஊராட்சியை சேர்ந்த கிளைக்கழக மேலமைப்புப் பிரதிநிதி திரு.A.ஆரிப் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் வருக, நல்லாட்சி தருக என்ற வரவேற்பு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை, கொள்ளிடம், புத்தூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியுள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் கூட அதிகளவில் போஸ்டர் ஒட்டப்பட்டு வருவது அதிமுக தலைமை நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.