கரும்பு சாறில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கரும்புச்சாறு இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் கால்சியம் என்று நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே இவை உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
சிறுநீரக கற்களை தடுக்கிறது:
இது ஒரு டையூரிடிக் என்பதால் இதை குடிப்பது நல்லது. இதனால் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று தடுக்கலாம். சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது. சிறுநீரகக் கற்களுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
முகப்பரு பிரச்சினை:
பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்சனையை இது சரி செய்ய உதவுகிறது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் கரும்பு சாறை பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும்.
மஞ்சள் காமாலை நோயை தடுக்கும்:
கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது செரிமானம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி மஞ்சள் காமாலை ஏற்படுவதை தடுக்கிறது. மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சினை:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
எனவே இந்த கரும்புச்சாறை வாரத்தில் மூன்று முறையாவது குடிக்கவேண்டும். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் அரை கிளாஸ் போதுமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பிரெஷான கரும் சாறை மட்டுமே குடிக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட கரும்பு சாற்றை குடிக்க கூடாது.