இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி தினகரன் அமமுக எனும் கட்சி ஆரம்பித்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் யாரை எதிர்த்து போட்டி போட்டார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம், புரட்சித்தலைவி அம்மா உடைய சின்னம்… அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துதான் போட்டி போட்டார்கள். யாரை எதிர்த்து போட்டி போட்டார்கள் அண்ணா திமுகவை எதிர்த்துதான் போட்டியிட்டார்கள்.
இரட்டை இலையும் எதிர்த்து போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்துப் போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்து போட்டியிட்டு, அண்ணா திமுகவை உடைக்கப்பட்டு முற்பட்டு, இரட்டை இலையும் முடக்க முற்பட்டவுங்க… எப்படி வந்து கருத்துக்களை சொல்வார்கள்.
நிச்சயமாக எந்த தொண்டனும் சரி, தமிழ்நாட்டு மக்களும் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொது மக்களைப் பொறுத்த வரையில் இன்று அரசியலை உற்று நோக்குகிறார்கள். பொதுவாகவே தொண்டர்களும் சரி, இன்னைக்கி சட்டதிட்டங்களை பார்த்தாலும் சரி, அவர்கள் அதிமுகவை உரிமை கொண்டாட எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.
ஐந்து வருடம் உறுப்பினராக இருப்பது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக உறுப்பினராக இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் டிடிவி தினகரன் கட்சியில் உறுப்பினரே கிடையாது. இப்போது சசிகலாவும் கட்சியில் உறுப்பினரே கிடையாது. அப்படி இருக்கும் பொழுது அவர்கள் எப்படி பொதுச் செயலாளர் என்று சொல்ல முடியும். உறுப்பினரா இல்லாதவங்க இத உரிமை கொண்டாட முடியாது.
அம்மாவிற்கு புதிய நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் உலகத்திலுள்ள அனைத்து மக்களின் எண்ணமும். அந்த கோரிக்கையை அரசு ஏற்று, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதற்கட்ட பணியாக மாண்புமிகு முதலமைச்சர், துணை முதல்வர் நினைவகத்தை திறந்து வைத்தார்கள். திறந்து வைத்ததற்கு பிறகு அம்மா நினைவிடத்தில் பணிகள் எல்லாம் இரண்டாவது பாகமாக நடந்து கொண்டிருக்கின்றது எனவே நினைவிடம் மூடப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.