தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவுடைய அரசைப் பொறுத்த வகையில் ஒரு தாயுடன் கொண்ட அரசு. எனவேதான் தாயுள்ளத்தோடு செயல்படுகின்றது. அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டவர். எந்த ஒரு அரசாங்கத்தை காட்டிலும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கூட அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கொடுத்தது கிடையாது.
ஆனால் அரசு ஊழியர்களை பொறுத்த வகையில் அதிக சலுகைகள் கொடுத்த வகையில் ஒரே அரசாங்கம் நம்முடைய இதயம் தெய்வம் அம்மாவுடைய அரசு தான். எனவே அதன் அடிப்படையில்…. செய்றவங்க கிட்ட தான் எல்லாரும் வந்து கேட்பாங்க…. செய்யாதவுங்க கிட்ட யாருமே கேட்க மாட்டாங்க….. அப்படினா அவங்களுக்குள்ள ஒரு நம்பிக்கை.
அதிமுக அரசிடம் கேட்டால் நமக்கு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை. அது ஒரு பெரிய விஷயம். மத்தவங்களுக்கு இடையில் நமக்கென்று செய்யக்கூடிய ஒரு அரசு என்றால் சொன்னால் அது அம்மாவுடைய அரசு தான் நிச்சயமாக செய்யும் என்று ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருக்கின்றது. எனவே அதன் அடிப்படையில்…. நம்பிக்கை இருந்ததோடு மட்டுமல்லாமல்…. அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்து வந்த நிலையில் கூட அதையெல்லாம் கூட தாண்டி நாம் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் நிதியை பொறுத்த வரையில் வருகின்ற வருவாயை கொண்டு தான் செலவுகளை செய்ய முடியும். எனவே பெரிய அளவிற்கு எல்லோருக்கும் செய்ய வேண்டும்… எல்லோரை காட்டிலும் அதிகமான அளவிற்கு செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசை, ஆர்வம் இருக்கின்ற ஒரு கட்சி என்று சொன்னாள் அது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அம்மாவுடைய ஆட்சிதான்.
இதையெல்லாம் அவர்களுக்கு தெரியும். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதைப்போல இப்பொழுது வந்து அவர்கள் எல்லோரும் கேட்கின்றார்கள், தட்டுகின்றார்கள். நிச்சயமாக எங்களைப் பொறுத்த வரையில் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப அவ்வப்பொழுது நியாயமான கோரிக்கைகள் என்னவோ அதையெல்லாம் எங்களுக்கும் இயன்ற வகையில் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம்.
அவர்களைப் பொறுத்த வரையில் கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகளை எல்லாம் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கின்றது. எனவே அதையெல்லாம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்று எங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறோம். அரசு ஊழியர்கள் இதற்கு உடன்பட்டு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.