Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உன்னை விட மாட்டேன்… பஞ்சாயத்து துணை தலைவருக்கு நடந்த சோகம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ ஏற்றி பஞ்சாயத்து துணை தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நாராயணன் என்ற பால் வியாபாரி வசித்து வருகிறார். இவர் செம்மரிகுலம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு அதே ஊரில் வசிக்கும் லிங்கதுரை என்ற உறவினருடன் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியபுரத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நாராயணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பின்னால் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லிங்க துரை அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நாராயணன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மெய்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய லிங்கதுரையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பஞ்சாயத்து துணை தலைவரை லோடு ஆட்டோ கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |