வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது போன்ற அடுத்தடுத்து வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அப்போது சரவணன், விஜயன் ஆகிய இரண்டு பேரும் திருட்டில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாரி, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இருவரின் மீதும் சிவகங்கை, அலங்காநல்லூர், பரமக்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளது.