Categories
உலக செய்திகள்

பதைபதைப்புடன் நகர்ந்த நிமிடங்கள்… சுட்டு வீழ்த்தப்பட்ட குழந்தைகள்… பெரும் முயற்சிக்கு பின் சிக்கிய நபர்… அமெரிக்காவில் பரபரப்பு…!!

அமெரிக்கா நடந்த துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள துல்சாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டனர். அவர்களில் ஒரு குழந்தை மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அதற்குள் அந்த குழந்தையும் பரிதாபமாக இறந்து விட்டது. அந்த சமயம் அந்த வீட்டில் துப்பாக்கியுடன் நின்றுக் கொண்டிருந்த ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து பெரும் முயற்சிக்கு பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. அதோடு துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் விவரத்தையும் போலீசார் கூறவில்லை.

Categories

Tech |