காலிப்ளவர் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தாளிக்க:
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் வெந்நீரில் வைத்து, அதில் காலிப்ளவரை போட்டு, சில நிமிடம் கழித்து எடுத்து சிறு சிறு பூக்களாக உதிர்த்து கொள்ளவும். பின்பு வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் அகலமான கடாயை வைத்து,அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு நன்கு தாளித்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்கு ஓரளவு நன்கு வேகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்த காலிப்ளவர் துண்டுகளை போட்டுகரண்டியால் நன்கு கிளறிவிட்டு, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி விட்டு கலந்து வேகும் வரை சில நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் வேக வைத்த காலிப்ளவர் கலவையானது, நன்கு வெந்து நிறம் மாறியபின், அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கரண்டியால், தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை நன்கு பிரட்டி விடவும்.
இறுதியாக தேங்காயின் பச்சை வாசனை போனபின், அதில் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, இறக்கி வைத்து பரிமாறினால், சாம்பாருக்கு ஏற்ற ருசியான காலிப்ளவர் பொரியல் ரெடி.