கொரோனா தடுப்பு மருந்தால் சுகாதார ஊழியர் உயிரிழந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மெதண்டா மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி 151 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது. இதில் தடுப்பு மருந்து போட்ட மறுநாள் மான்னு பகான் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அவருக்கு எந்தவித நோயும் ஏற்படவில்லை . ஆனாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 36 மணி நேரத்தில் உயிரிழந்தார். இதன் காரணமாக அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உயிரிழப்புக்கான காரணம் பற்றி தெரியவரும் என்று தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.