வெறும் 875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியை சேர்ந்த தம்பதிகள் இந்திராணி- முத்துவீரன். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையின் எடை வெறும் 875 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு பின்னர் தாய்ப்பால் புகட்டபட்டுள்ளது. குழந்தை வளர்ச்சிக்கான சிகிச்சையும் மஞ்சள் காமாலைக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தை 1.1 கிலோவாக அதிகரித்துள்ளதால் தாயும்,சேயும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குறைவான எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.