தமிழ்நாடு பெயர் மாற்றுவது பற்றி பரிசீலித்து 8 வாரங்களில் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு தூய்மை மட்டுமல்லாமல் பலவற்றிலும் சிறந்து விளங்குகிறது. அதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். வெற்றி நடைபோடும் தமிழகமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர் பரிசீலித்து எட்டு வாரங்களில் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை சரியான உச்சரிப்பு வரும் வகையில் மாற்ற கோரி செல்வகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவை பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.