ஈராக்கில் இரவு நேரத்தில் நடந்த ரகசிய ஆபரேஷன் போது பாராசூட் உதவியுடன் கீழே குதித்த வீரர்கள் எதிரி நாட்டு எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈராக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு வீரர்கள் பேராஷூட் உதவியுடன் கீழே குதித்தனர். அப்போது அவர்களது இரண்டு பேராஷூட்களும் சிக்கிக் கொண்டதால் எதிரி நாட்டின் தரையில் வேகமாக சென்று விழுந்துள்ளனர்.
இதனால் அவர்களுக்குமுதுகெலும்பிலும், கை கால்களிலும் பலத்த காயம் அடைந்து உள்ளது. அவர்களுக்கு காயம் ஒருபுறமிருந்தாலும் ஐஎஸ் அமைப்பினர் தங்களை வந்து பிடித்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் இருந்தன. அதன்பின் அவர்கள் உடனடியாக தங்களது ரேடியோ மூலம் சக வீரர்களுக்கு தகவல்களை அளித்தனர்.
தகவல் அறிந்த சில நிமிடங்களில் வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பின் காயமடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், காயமடைந்த ஒருவர் கூறியதாவது, பேராஷூட் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்ததை விட ஐஎஸ் அமைப்பினர் வந்து எங்களை பிரித்து விடுவார்களோ என்ற திக் திக் நிமிடங்களை நாங்கள் கடந்துள்ளோம் என்று நினைவு கூர்ந்துள்ளார்.