Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் சொன்னபடி செஞ்சாத்தான் சரியாகும்… போலி மந்திரவாதியிடம் சிக்கிய பெண்… மகளை குணப்படுத்த நினைத்து நடந்த விபரீதம்…!!

விசேஷ பூஜைகள் நடத்த வேண்டும் எனக்  சிறுமியின் தாயார் இடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மந்திரவாதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியை சக்திவேல் என்ற மந்திரவாதி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை உண்மை என்று நம்பிய கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது 7 வயது மகளை குணப்படுத்துவதற்காக அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு சக்திவேல் உங்கள் வீட்டில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டால் தான் மகளை குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

இவரின் பேச்சை உண்மை என்று நம்பிய அந்த பெண் தனது வீட்டின் முகவரியை கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற சக்திவேல் அந்த ஏழு வயது சிறுமியை குணப்படுத்துவதாக கூறிவிட்டு அந்த சிறுமியின் தாயிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்று உள்ளார்.  இதுகுறித்து ஒரத்தூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மந்திரவாதி எனக் கூறி ஏமாற்றி வந்த சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Categories

Tech |