Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை..!!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கடந்த 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது  தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையின் மீது மூன்று நாட்களில் ஆளுநர் முடிவு எடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஆளுநர்  எந்த வித முடிவும் மேற்கொள்ளாமல் உள்ளார் . இந் நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9-ம் தேதி விசாரணைக்காக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Categories

Tech |