சசிகலா வரும் 8ஆம் தேதி சென்னை வர உள்ளதாகவும் அப்போது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செய்யப்பட்டு கொரோனா தொற்று காரணமாக கர்நாடகாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் ஏழாம் தேதிக்கு பதிலாக எட்டாம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு சசிகலா தமிழகம் வருகிறார் என பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலாவை வரவேற்க சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த திடீர் திருப்பத்திற்கு காரணம் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும், சென்னை வரும் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.