Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த மர்ம கும்பல்… தி.மு.க துணை செயலாளருக்கு நடந்த கொடூரம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தி.மு.க-வின் ஒன்றிய துணை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல் மனம்பேடு மீனாட்சி நகரில் கருணாகரன் என்ற தி.மு.க பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனியமுதன் மற்றும் பருதி என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கோமதி தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கின்றார்.

இந்நிலையில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாகரன்  வெள்ளவேடு பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருக்கும்போது, திடீரென மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் இருந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலானது  கத்தி மற்றும் அரிவாளால் கருணாகரனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிப்பதற்காக 3 தனிப்படைகளை அமைத்து உள்ளனர். இந்நிலையில் மேல்மனம்பேடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கொலையானது முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளதா அல்லது வேறு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |