டெல்லி விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இதுபோன்ற கருத்துக்கள் மூலம் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமிக்ஷா கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் பற்றி செய்தியை டிவிட்டரில் பதிந்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா இது குறித்து ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். ரிஹானாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இங்கிலாந்து எம்.பி, கிளாடியா இந்த பிரச்சனை நாடாளுமன்றத்தில் எழுப்பபோவதாக தெரிவித்துள்ளார்.
சுவீடன் நாட்டை சேர்ந்த சர்வதேச சூழலியல் ஆர்வலர்ரான கிரேட்டா தன்பெர்க் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளார். விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும், நம் நாட்டின் கட்டமைப்பு விவசாயிகள் தான் என்றும், அனைத்து தரப்பினருக்கும் இடையே இணக்கமான தீர்வு காணப்படும் என்றும் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடைய பாப் பாடகி ரிஹானாவிற்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா ரணாவத் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல என்றும் இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சிக்கும் பயங்கரவாதிகள் என்றும் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். இந்திய விவகாரங்களை வெளிநாட்டவர்கள் வேடிக்கை பார்க்கலாமே தவிர அதில் கலந்து கொள்ள முடியாது என்றும், இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
உள்நாட்டுப் பிரச்சனையில் வெளிநாட்டவர்கள் தலையிடக்கூடாது என்றும், இந்தியா தனது பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளும் என்றும் பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே டிவிட்டர் பதிவு வெளிட்டுள்ள உள்துறை அமைச்சர் திரு .அமித்ஷா வெளிநாட்டினரின் பிரச்சாரங்கள் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்காது என்றும் இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்காது என்றும் கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்கள் பொறுப்புடன் ட்வீட் செய்யுமாறு இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டினர் கருத்து நம் ஒற்றுமையை பிளவுபடுத்தும் என்றால் நம் மதிப்பை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டுமே தவிர மற்றவர்களை குறை சொல்லக் கூடாது என்று எண்ணும் விதத்தில் நடிகை டாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.