Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு..!!!

இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையை மேம்படுத்த புதிய சட்டங்கள் உதவும் என்றும் கூறியுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் இந்திய வணிகச் சந்தையின் வலிமையை மேம்படுத்துவதோடு தனியார்துறை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. அதேநேரம் டெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா வெற்றிகரமான ஜனனாயகத்தை தனிச்சிறப்பை குறிக்கும் அமைதிவழிப் போராட்டங்களை அங்கீகரிப்பதாக கூறியுள்ளது. பிரச்சனைகளுக்கு அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை யோசனை தெரிவித் துள்ளது.

Categories

Tech |