நடைபயிற்சி மேற்கொண்ட போது நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மங்காபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.