Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடுமை…. சரவணனுக்கு ஏற்பட்ட நிலை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் வாழப்பாடி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர். இவருடைய மகன் சரவணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவரின் குடும்பத்தினர் சரவணனை ராணிப்பேட்டை ஜியோ நகர் பகுதியில் இருக்கும் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அந்த மறுவாழ்வு மையத்தில் சரவணனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த சரவணனை மறுவாழ்வு மையத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த குடும்பத்தினர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் பேசியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். மேலும் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் சரவணனை தாக்கியதால்தான் சரவணனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என சரவணனின் உறவினர்கள் மறுவாழ்வு மையத்தின் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை உடைத்துள்ளனர்.

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களிடம் இது பற்றி கேட்ட போது “சுமார் 22 பேர் இங்கு சிக்ச்சை பெற்று வருகிறோம். எங்களுக்கு அவர்கள் சரியான உணவு கொடுப்பதில்லை. உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்கள் குடும்பத்தினருடன் எங்களை சேர்க்க வேண்டும்” என்று கண்ணீருடன் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்த மூன்று பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |