Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்… துரிதமாக செயல்பட்ட ரயில்வே துறையினர்…!!

அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் அப்பாதையில் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷனானது திருப்பூர்-சோமனூர் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தண்டவாள விரிசல் குறித்து திருப்பூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக திருப்பூர் வந்த கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை நோக்கி சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து சுமார் அரை மணி நேரத்திலேயே அந்த விரிசல் சரி செய்யப்பட்டதால் ரயில்கள் அந்த பாதையில் விடப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறும்போது, சரியான நேரத்தில் அந்த விரிசலானது கண்டுபிடிக்கப்பட்டதால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனவும், அப்பகுதியில் பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |