புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெறும் 875 கிராம் எடையில் பிறந்த குழந்தையை அரசு மருத்துவர்கள் காப்பாற்றி நல்ல உடல்நலத்துடன் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மறவன்பட்டியை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மனைவி இந்திராணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் குறைமாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் 175 கிராம் எடையுடன் பிறந்த அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படது.
ஒரு வார காலத்தில் தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் முழுமையாக சரியானதும் தாய்ப்பால் வழங்கப்பட்டு வந்த நிலையில் குழந்தையின் எடை அதிகரித்தது.
48 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் எடை 1.1 கிலோவாக அதிகரித்தது. பின்னர் கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை என அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு குழந்தை நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் பூபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.