Categories
தேசிய செய்திகள்

கண்களை கட்டிக்கொண்டே Rubik’s cube விளையாடி சாதனை… 13 வயது சிறுமியின் அசத்தல் திறமை…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கண்களை கட்டிக்கொண்டு ரூபிக் கியூப் என்ற விளையாட்டை விளையாடி 13 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் சுஜித் அனுபமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றை அவர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த தம்பதிக்கு 13 வயதில் தனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். அந்த சிறுமி அதிவேக கற்றல் திறன் கொண்டவர். அம்மாநில கல்வித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று அவரது பதினோரு வயதிலேயே பத்தாம் வகுப்பு தேர்வும், 12 வயதில் பிளஸ் 2 தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

அந்த சிறுமி தற்போது பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு நிறங்களை கனசதுர கட்டங்களை ஒருசேர ஒழுங்குபடுத்தும் விளையாட்டான ரூபிக் க்யூப் என்ற விளையாட்டை கண்களை கட்டிக் கொண்டு விளையாடி சாதனை படைத்துள்ளார். மேலும் இவரது சாதனையை ஆசிய புக் ஆஃ ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது.

Categories

Tech |