புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர். இது வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து இந்தப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளிநாட்டு துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்த ஒரு வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும் என வாஷிங்டன் அங்கீகரிக்கிறது என்றும், இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டங்கள் வெற்றிகரமான ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், இந்திய சந்தைகளில் அங்கீகரிக்கப்படும் தனியார் முதலீட்டை வரவேற்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.