தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது குறித்து நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.