விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக கிரெட்டா மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கிரெட்டா மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கையை டெல்லி காவல்துறையினர் எடுத்துள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.