பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கயிருக்கிறது.
STRR திட்டம் என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின்கீழ் ஓசூரிலிருந்து ஆனேக்கல்,கனகபுரா,ராம்நகர்,மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச் சாலை அமைய இருக்கிறது .இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948-A என பெயரிடப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 4,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.சாலையின் மொத்த நீளம் 180 கிலோமீட்டர் ஆகும்.கர்நாடகா மாநிலத்தில் 135 கிலோமீட்டர் அளவிற்கும் ஓசூர் பகுதியில் 45 கிலோமீட்டர் அளவிற்கும் அமைகிறது.ஓசூர் பகுதியில் அமையுள்ள 6 வழிச் சாலைக்காக 400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த உள்ளன.6 வழி சாலையில் செல்லும் வாகனங்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் விரைந்து செல்லலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பெங்களூர் மற்றும் ஓசூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.6 வழி சாலை அமைத்திட நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஓசூர் பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.