பிரான்சில் வீடின்றி தெருக்களில் வசிப்பவர்களுக்கு உதவிட செல்வந்தர் ஒருவர் புதிய ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
பிரான்ஸில் லியோன் என்ற நகரில் இருக்கும் செல்வந்தரான அலைன் மேரியஸ் என்பவர் வீடின்றி இருப்பவர்களுக்கு உதவிட “தி கம்பெனி ஆப் பாசிபிலிட்டிஸ்” என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு சிறிய அளவில் எல்லா வசதிகளுடன் கூடிய வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
இதற்காக இந்த அமைப்பில் இருக்கும் பிரான்ஸ் பணியாளர்கள் தங்களது விடுமுறை நாட்களில் வேலை செய்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து அலுவலக பணிகளுக்கு செலவிடுகிறார்கள். இந்த அமைப்பை உருவாக்கிய அலைன் மேரியஸ் கூறியதாவது, நான் என் இளம் வயதில் இப்படி வீடற்ற நிலைமையைத்தான் பார்க்கவில்லை.
முற்காலத்தைப் போல அனைவரும் வீடுகளில் ஒற்றுமையாக சேர்ந்து வாழும் நிலைமையை நான் உருவாக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். மேலும் இவரது முயற்சிக்கு லியோன் நகர நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளது.