உலகில் முதல் நாடாக கனடா, அமெரிக்காவில் பிரபலமாகி வரும் proud Boys குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட குழு “proud Boys”. இந்த குழு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கொண்டுள்ளது. கனடா இந்த குழுவினை “தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்திருக்கிறது. மேலும் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் இந்தக் குழு தொடர்புடையது என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில், இந்த proud Boys குழு மற்றும் அவர்களின் உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்த்து கலவரத்திற்கு திட்டங்களை வகுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கு அவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பரப்பும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. மேலும் இஸ்லாம் மத எதிர்ப்பு, யூதர்களை எதிர்ப்பது மற்றும் இனவெறி தொடர்புடைய கருத்துக்கள், வெள்ளையர்களை ஆதரித்து கருத்து கூறுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கனடா அரசின் இந்த விரைவான நடவடிக்கையால் proud Boys குழுவிற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்படும். அதோடு தீவிரவாதம் குறித்த குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் proud Boys குழுவில் உள்ள உறுப்பினர்கள் என்று கூறி நடவடிக்கைகள் யார்மீதும் எடுக்கப்படாது, ஆனால் இந்த குழுவில் ஒரு உறுப்பினராவது கலவர சம்பவங்களில் ஈடுபட்டால் தீவிரவாத குற்றங்களுக்கு உரிய குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது.