வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த 14 ஆண்டுகளாக தன் தம்பியை பாதுகாத்துவரும் அண்ணனின் வாழ்க்கையைக் குறித்து இதில் பார்ப்போம்.
லிஜொவுக்கு தற்போது 33 வயதாகிறது. 16 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை படிக்க கல்லூரிக்கு செல்ல தயாராகும் போது திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட லிஜொ தனது பேச்சு மூச்சை தவிர உடல் ஸ்தம்பித்து செயலற்றதால் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவமனையில் ஐசியூ- வில் ஒன்றரை ஆண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், பல லட்சம் ரூபாய் செலவாகும். இந்நிலையில் விபின் தன் தம்பியை வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து பல லட்சம் ரூபாய் செலவழித்து கடனாளியாக மாறினார். இருப்பினும் தனது சொத்துக்களை விற்றாவது தம்பியை காப்பாற்ற வேண்டும் என்று மன உறுதியோடு இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை சிறிது கூட முன்னேறிய பாடில்லை. தனது வீடு சொத்து அனைத்தையும் விற்று தம்பியின் சிகிச்சைக்காக செலவழித்தார். பின்னர் வாடகை வீட்டில் தங்கி தம்பிக்காக பலரிடம் கடன் வாங்கி வென்டிலேட்டர் கருவியை பொருத்தி தம்பியின் உயிரை காப்பாற்றி வந்தார். வீட்டுக்கு ஒரு ஆண்டு காலமாக வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
கடன் தொல்லை காரணமாக அவரது மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளானார். தனது குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறார். இருப்பினும் தனது சகோதரனை காப்பாற்ற வேண்டும் என்று மன உறுதியுடன் போராடி வருகிறார். அவரது உடன்பிறந்த இறுதி இரு சகோதரிகள், ஒரு சகோதரன் உறவினர்கள் அனைவரும் அவரை வந்து கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் யாரையும் குறை கூறாமல் தனது தம்பியின் உயிரை காக்க போராடி வருகின்றார்.
24 மணி நேரமும் வென்டிலேட்டர் ஓடிக்கொண்டிருப்பதால் மாதம் 6 ஆயிரம் வரை மின் கட்டணம் வருகிறது. சில சமயம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் இன்வெர்ட்டர் கொண்டு வென்டிலேட்டர் செயலிலகாமல் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு நிமிடம் கூட கண்ணிமைக்காமல் தம்பி உயிரை பாதுகாக்க பாசப் போராட்டம் நடத்திவருகிறார். பல நாட்கள் உணவு கூட இல்லாமல் இருந்து வருகிறார். அருகில் உள்ள சில நல்ல உள்ளங்கள் பசியை போக்கி வருகின்றன.
தற்போது இந்த பாசப் போராட்டம் குறித்து கேரள மனித உரிமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஸ்ரீஜேஷ் என்பவர் அண்ணன் தம்பி வாழ்க்கை போராட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் கேரளா முதல்வரிடம் உதவியை நாடியுள்ளனர். யாராவது தன்னார்வலர்கள் முன்வந்து இவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.