Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

அடடே…. குறைஞ்சுட்டே…. மகிழ வைத்த தங்கம் விலை… சைலண்டா வேலையை காட்டிய பட்ஜெட் …!!

சென்னையில் தங்க விலை ஒரு சவரன் 36 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5% இடத்திலிருந்து 7.5% குறைக்கப்பட்டது.

இதனால் தங்க விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று 36 ஆயிரத்து 232ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு 8 கிராம் ஆபரண தங்கம் இன்று 256 குறைந்து 35 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது.

இதைப் போன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 73 ரூபாய் 20 காசுகளாக இருந்தனர். இன்று 72. 20 பைசாவாக குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |