Categories
மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த ரவுடி கைது…! ஆந்திரா சென்று தூக்கிய தமிழக போலீஸ் …!!

ஆந்திராவில் பதுங்கி இருந்த பாஜக பிரமுகரரும், கூலிப்படை தலைவருமான கல்வெட்டு ரவி சென்னை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அப்பொழுது தான் திருந்தி விட்டதாகவும், சமுதாய பணியில் ஈடுபட போவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் கொலைமுயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

அதில் ரவுடி ரவி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பெயரில் ரவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டார்.

அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்த தகவலின் படி ஆந்திராவில் விரைந்த சென்னை தனிப்படை போலீசார் ரவுடி கல்வெட்டு ரவியின் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ஆறு கொலைகள் உள்ளிட்ட 30 வழக்குகள் தொடர்புடைய கல்வெட்டு ஆறுமுறை குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |