Categories
தேசிய செய்திகள்

“இருபாலருக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க கோரிய வழக்கு”…. ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…!!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிர்ணயிக்க கோரிய வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதனை ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்வினி குமார் உபைதா என்பவர் தாக்கல் செய்த மனுவில் பாலினரின் நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் கவரும் ஆகியவை பாதுகாக்கப்படவேண்டும்.

இது தொடர்பாக முரண்பாடான கருத்துக்களை தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருபாலினருக்கும் ஒரே திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கை தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே  தலைமையிலான அமர்வு இது போன்ற வழக்குகளை ஒன்றாக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இரு பாலினத்திற்கும் திருமண வயது ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்குமா என்பது இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் தெரியவரும்.

Categories

Tech |