Categories
மாநில செய்திகள்

7ம் தேதி இல்லையா…? 8-ம் தேதியாம்…. டிடிவி தினகரன் அறிவிப்பு…!!

பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8ம் தேதி  சசிகலா தமிழகம் வருவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதற்கு முன்பாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து அவர் பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் ஓய்வு பெற்று வருகிறார்.

இந்நிலையில் சசிகலா பிப்ரவரி 7ஆம் தேதி தமிழுக்கு வர உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனிடையே சசிகலா பிப்ரவரி 7ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |