Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை நிராகரிப்பு… ஆளுநர் பரபரப்பு உத்தரவு…!!!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து விட்டார்.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்க வேண்டுமென்று ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து விட்டார். 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு.

அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஜனவரி 25ஆம் தேதி நிராகரித்து ஆணையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |