மதுரை மாவட்டம் சோழவந்தான் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேளக்கால் பகுதியில் உள்ள பேக்கரி கடையின் முன் கடந்த 27ஆம் தேதி ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நான்கு இளைஞர்கள் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து அந்த பெண் காடுபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அப்போது பேக்கரி கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கண்டுபிடித்துனர். மதுரையை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆனைப்பட்டி வந்த போது சிகரெட் வாங்க பணம் இல்லாததால் ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் செல்போனை பறித்துக்கொண்டு சென்று 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.