தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத முதல்வர் மோடி வருகின்ற 14ஆம் தேதி சென்னை வரை இருக்கிறார். இதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை வெங்கோ நகருக்கு இடையில் மெட்ரோ திட்டத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல. காவிரி குண்டாறு அணை கட்ட அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதுபோல பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் சென்னை வர இருக்கின்றார்.
அப்பொழுது பிரதமர் வரும்பொழுது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எவ்வாறெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க முடியும். என்பதற்காக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சி நடைபெற நேரு ஓய்வு விளையாட்டு அரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கலைவாணர் அரங்கம் தற்பொழுது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் முன்னேற்பாடுகள் செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் உள்ளதால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை அதிகாரிகள் தேர்வு செய்ய உள்ளதால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உள் விளையாட்டு அரங்கத்தில் சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைத்து மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தலைமைச் செயலாளர் , காவல் ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள் என அனைத்து அரசு அதிகாரிகளும், அதே போல மத்திய அரசின் பாதுகாப்புத் துறையினர் அனைவரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.