திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி, வேலாயுதம் பட்டி, முலையுறு உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி பயிரான மொச்சை, உளுந்து, சோளம், கொள்ளு உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் காட்டு மாடுகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் காட்டுமாடுகளை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.