திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற திருடர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி சேர்ந்தவர் ஜெஸிந்தா இவர் சாலையில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஜெஸிந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். நத்தம் பாலமேடு சாலையை ஒட்டியுள்ள வளையப்பட்டி என்னும் பகுதியில் தடுப்புகளை உடைத்து கொல்லையர்கள் அதில் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் நிலைமை புரிந்து கொண்டு கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அவரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையடித்த சினிமாபானியில் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.