தற்போது சென்னையில் பல பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது
பருவமழை பொய்த்ததால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மக்கள் தண்ணீரின்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தென்மேற்கு வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்றும், நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், திநகர், வளசரவாக்கம் பகுதிகளிலும் அசோக் நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.