ஒற்றைக்கொம்பன் யானையானது நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மூன்று பேரை ஒற்றைக்கொம்பன் யானையானது ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்று விட்டது. இதனால் சுமார் மூன்று கும்கிகளுடன் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதோடு அந்த ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஒற்றைக் கொம்பன் யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள நீலம்பூர் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த அந்த யானையை ஆதிவாசி மக்கள் பார்த்ததாக தகவல் வெளியாகின.
இதனை அடுத்து அந்த யானையை தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த யானையானது நீலகிரியை ஒட்டியுள்ள கேரளா வனப்பகுதிக்குள் நுழைந்ததைஅதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். இதனையடுத்து இந்த ஒற்றைக் கொம்பன் யானையானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி வந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே மயக்க ஊசி செலுத்தி வனத்துறையால் சங்கர் என்று அழைக்கப்படும் இந்த ஒற்றைக் கொம்பன் யானையை முகாமில் அடைக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றனர்.