Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதன்முறையாக எதுவுமே இல்லாமல்… நடைபாதையாக அழைத்து செல்லப்பட்ட ரிவால்டோ யானை…!!

மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மாத நல்லா மற்றும் வாழைத்தோட்டம் போன்ற இடங்களை சுற்றி உள்ள சுற்றுப்புற பகுதியில் 15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீ பந்தம் வீசப்பட்டதால் வேறு ஒரு யானை பலி ஆகிவிட்டது. இந்நிலையில் வனத்துறையினர் இந்த யானைக்கும் அதே நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சி அதனை தெப்பகாடு முகாமிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தினால் மூச்சுவிட அவதிப்படும் யானைக்கு அது மீண்டும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிந்த வனத்துறையினர் முதன் முறையாக வாகனம், மயக்க ஊசி மற்றும் கும்கி என எதுவும் இல்லாமல் யானையை கால்நடையாக கரும்பு, தர்பூசணி போன்றவற்றை வழிநெடுக கொடுத்து அழைத்து  வருகிறார்கள். இந்த யானையானது குரும்பர் பள்ளம் அருகில் வந்தபோது, அதில் ஓடிய தண்ணீரை குடித்துள்ளது.

அதன்பிறகு அந்த யானைக்கு ஊழியர்கள் மூங்கிலை உணவாக கொடுத்த பின்னர் அதனை சாப்பிட்டுவிட்டு யானை அங்கேயே ஓய்வெடுத்து உள்ளது. மேலும் இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ரிவால்டோ யானை மூச்சு திணறல் காரணமாக தினமும் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே நடந்து அதன் பிறகு களைப்பால் தூங்கி விடுகிறது எனவும், பழம் கொடுத்து மெதுவாகத்தான் அந்த யானையை அழைத்து செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த யானையை அழைத்து செல்ல மேலும் இரண்டு நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். அதோடு தெப்பக்காடு முகாமில் யானையை பராமரிப்பதற்காக அமைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மக்களிடையே இத்தனை வருடங்கள் தங்களுடன் சகஜமாக பழகி வந்த யானை பிரிந்து செல்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |