ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் நின்றபடியே பணியாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. அது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி கதிரவன், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் சென்றனர். அவற்றை அனைத்தையும் எடுத்து வாசலின் வெளியே வைத்து விட்டனர். அதனால் திகைத்துப்போன அரசு ஊழியர்கள் அனைவரும், நாற்காலி இல்லாததால் நின்றபடியே தங்கள் வேலையை செய்தனர்.