பைபாஸ் சாலையில் ஆண் பிணம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை சாலைப் பகுதியின் ஓரத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் லாரி டிரைவர் சுரேஷ்குமார் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுரேஷ்குமாரை கொலை செய்தவர்கள் யார் ? கொலை செய்ததற்கான காரணம் என்ன ? என்பது குறித்தும் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.