திருமணமாகி 15 நாட்களில் மனைவியை தனியாக தவிக்க விட்டு ஆஸ்திரிலியா சென்ற கணவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிந்துஸ்ரீ என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களில் சுரேஷ் பணிக்காக ஆஸ்திரேலியா சென்றார். தன் மனைவியை விரைவில் தான் பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று உறுதி அளித்தார்.
ஆனால் அவர் சென்ற பின் அவரிடம் இருந்து பிந்துஸ்ரீக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்த கவலையில் இருந்த பிந்துஸ்ரீக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் சுரேஷின் பெற்றோர்கள் பிந்துஸ்ரீயிடம் வரதட்சனை கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் இதற்கு பிந்து ஸ்ரீ அஞ்சாமல் போலீசிடம் சென்று தன் கணவர் மீதும் மாமனார்,மாமியார் மீது புகார் அளித்தார்.
புகாரை ஏற்று விசாரித்த போலீசார் சுரேஷை சொந்த ஊருக்கு வர வைக்க முயற்சித்தனர். அதன்படி அவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் தெரிவித்தார். நிர்வாகம் சுரேஷை பணி நீக்கம் செய்தது. பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி வந்த சுரேஷை போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.