Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்மநபர்களின் கைவரிசை… விரட்டி பிடித்த பொதுமக்கள்… சிறைக்கு சென்ற கொள்ளையர்கள்…!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மர்மநபர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொசவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்-ஜெசிந்தா தம்பதியினர். ஜெசிந்தா நேற்று காலை வீட்டிலிருந்து நடந்து கொண்டிருக்கும் போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஜெசிந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் கொள்ளையாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத இரண்டு சக்கர வாகனத்தை கண்டதும் காவல்துறையினர் பிடிக்க முயற்சிக்கும் அவர்கள் தப்பிச் சென்றதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அவர்களை விரட்டிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ஜெசிந்தா சங்கிலியை பறிமுதல் செய்து அவரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |