Categories
உலக செய்திகள்

பிரசவ நேரத்தின்போது கொரோனா… பெற்ற குழந்தையை பார்க்க தவித்த தாயின் ஏக்கம்… மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த உருக்கமான சம்பவம்…!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் மூன்று மாதங்களுக்குப் பின் தனது பிஞ்சு குழந்தையை பார்க்கும் மகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் கெல்சி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நான்காவது கர்ப்பத்தில் குழந்தை பிறக்கும் சூழ்நிலையில் இருந்தார். அப்போது இவரை துரதிஷ்டவசமாக கொரோனா தாக்கியது. அதன்பிறகு இவர் அங்குள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது.

இதனால் அவர் நான்காவதாக அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் கெல்சியின் உடல் சிறிது மோசமாக இருந்தது. அதனால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் சில நாட்களில் அவரது உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கடந்த ஜனவரி மாதம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

குழந்தையை கெல்சியின் கணவர் டெரக் டவுன்சென்ட் பராமரித்து வளர்ந்து வந்தார். ஏற்கனவே மூன்று குழந்தைகளை வளர்த்து வந்த தந்தை நான்காவதாக பிறந்த பெண் குழந்தைக்கு லூசி என பெயரிட்டு கவனமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த கெல்சி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அங்கு தனது செல்ல மகள் லூசியை கையில் எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |